புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: புதன், 13 நவம்பர் 2019 (20:00 IST)

”தேர்தலுக்கு பின் வேறு மாதிரி பேசுகிறார்கள்”.. அமித்ஷா குற்றச்சாட்டு

மஹாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா சிவ சேனா மீது குற்றம் சாட்டியுள்ளார்.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக-சிவசேனா இடையே இழுபறி நடைபெற்று வந்த நிலையில், தற்போது குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, ”தேர்தலுக்கு முன்பே ஃபட்நாவிஸ் தான் முதல்வர் என கூறினோம், அப்போது மறுத்து பேசாதவர்கள், தேர்தல் முடிந்த பின் வேறு மாதிரி பேசுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது” என கூறியுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற மஹாராஷ்டிரா தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்ற போது, சிவசேனா ஆட்சிகாலத்தை பிரித்து பகிர வேண்டும் என கோரியது கூடுதல் தகவல்.