மகாராஷ்டிராவில் துரோகம் செய்தது யார்? அமித்ஷா ஆவேசம்
மகாராஷ்டிராவில் ஆட்சி அதிகாரம் தொடர்பாக சிவசேனாவுக்கு பாஜக நம்பிக்கை துரோகம் எதுவும் செய்யவில்லை என பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்துள்ளார்
இதுகுறித்து பேட்டி ஒன்றில் கூறிய அமித்ஷா, மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றால், தேவேந்திர பட்னாவிஸ் தான் முதலமைச்சர் என தேர்தலுக்கு முன்கூட்டியே ஒப்பந்தம் செய்தோம். அப்போது சிவசேனா எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால் திடீரென தற்போது சிவசேனா கட்சி புதிய நிபந்தனைகளுடன் வந்ததால் எங்களால் அதனை ஏற்க முடியவில்லை
ஆட்சி அமைக்க ஆளுநர் வாய்ப்பு அளிக்கவில்லை என சிவசேனா கூறுவது தவறு. போதிய எண்ணிக்கை இருந்தால், ஆளுநரிடம் அதற்கான கடிதத்தை அளித்து இப்போது கூட யார் வேண்டுமானாலும் ஆட்சி அமைக்கலாம் என்றும் அமித் ஷா கூறினார்.