முத்தலாக், காஷ்மீர், அயோத்தியில் வெற்றி! பாஜகவின் அடுத்த மெகா பிளான்!

Last Modified சனி, 9 நவம்பர் 2019 (17:41 IST)
கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலிலும், 2019ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் பாஜக தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைத்ததால் பல தைரியமான முடிவுகளை பலவித எதிர்ப்புகளையும் தாண்டி நிறைவேற்றி வருகிறது

குறிப்பாக காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவை நீக்கியது, முத்தலாக் சட்டம் கொண்டு வந்தது ஆகியவற்றைச் சொல்லலாம். இந்த நிலையில் பாஜகவின் அடுத்த கொள்கையான அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் திட்டமும் இன்று வெளியான தீர்ப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுவிட்டது. இதனால் பெரும் சந்தோஷத்தில் இருக்கும் பாஜக, அடுத்ததாக தனது பார்வையை பொது சிவில் சட்டத்தில் செலுத்த உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
1949 ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் நேரு காலத்தில் இருந்தே விவாதிக்கப்படும் ஒரு திட்டம் தான் பொது சிவில் சட்டம். இந்த சட்டத்தின்படி இந்திய குடிமகன்கள் அனைவரும் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் ஒரே சட்டம் என்பது தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டால் சிறுபான்மையர் குறிப்பாக இஸ்லாமியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் அவர்கள் இந்த பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்
ஆனால் அதே நேரத்தில் பொது சிவில் சட்டம் கொண்டு வந்தால் இஸ்லாமிய பெண்களுக்கு நீதி கிடைக்கும் என்ற ஒரு வாதத்தை முன்வைத்து இந்த சட்டத்தை கொண்டு வர பாஜக முயற்சித்து வருகிறது. இதன் முதல் படியாகத்தான் முத்தலாக் தடை சட்டம் கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. காஷ்மீர், முத்தலாக் மற்றும் அயோத்தி பிரச்சனை ஆகியவற்றில் வெற்றி பெற்ற பாஜக, பொது சிவில் சட்டம் கொண்டு வருவதிலும் வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்


இதில் மேலும் படிக்கவும் :