பாஜக தலைவர் மகன் குத்திப் படுகொலை - பீகாரில் பயங்கரம்

stab
Last Modified செவ்வாய், 9 அக்டோபர் 2018 (09:12 IST)
பீகாரில் பாஜக தலைவரின் மகன் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிகார் மாநிலத்தில் லோக்கல் பாஜக தலைவர் கங்கோத்ரி பிரசாத். இவருக்கு பியூஷ்குமார் என்ற மகன் இருந்தார்.
 
இந்நிலையில் பியூஷ் நேற்று இருசக்கர வாகனத்தில் வெளியே சென்ற போது அவரை பின்தொடர்ந்த மர்ம நபர்கள் அவரின் வண்டியை வழிமறித்து தாக்கினர்.
 
உயிருக்கு பயந்து பியூஷ் ஓடினார். ஆனால் அவரை விரட்டிக்கொண்டு ஓடிய மர்ம நபர்கள், அவரை சரமாரியாக குத்திக் கொலை செய்துவிட்டு தப்பியோடினர்.
 
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் பியூஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் பாஜக தலைவரின் மகன் படுகொலை செய்யப்பட்டது பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :