திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 8 அக்டோபர் 2018 (10:54 IST)

இறந்த மகனுக்கு சிலை வைத்து வழிபடும் பெற்றோர்

கர்நாடகாவில் இறந்த மகனுக்கு பெற்றோர் சிலை வைத்து வழிபடும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த உலகத்தில் ஈடு இணை இல்லாத உறவு என்றால் அது தாய் தந்தை உறவு தான். அவர்கள் நம் மீது வைக்கும் பாசத்தைப் போல் நம் மீது யாராலும் இவ்வளவு பாசத்தை வைக்க முடியாது.
 
கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் வேதசூகூர் கிராமத்தை சேர்ந்தவர் ஈரண்ணா. இவரது மனைவி ஈரம்மா. இவர்களுக்கு விஜயக்குமார் என்ற மகன் இருந்தார்.
 
இந்நிலையில் சமீபத்தில் விஜயக்குமார் மஞ்சள் காமாலை வந்து இறந்துபோனார். தங்களது ஒரே மகனின் மறைவை அவர்களது பெற்றோரால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.
 
இதனையடுத்து சிற்பியான அவரது தந்தை ஈரண்ணா மகன் விஜயக்குமாரின் சிலையை வடிவமைத்து வீட்டில் வைத்து வழிபட்டு வருகிறார். இதுகுறித்து பேசிய அவர்கள், எங்களது மகனை திடீரென பறிகொடுத்துவிட்டோம். இவ்வாறு மகனுக்கு பூஜை செய்வது மூலம் அவன் எங்களோடு இருப்பது போல் இருக்கிறது என்று கண்ணீர் மல்க கூறினர்.