திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 16 மார்ச் 2018 (13:57 IST)

மத்திய அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் நிராகரிப்பு

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரிய விவகாரத்தில் மத்திய மீது மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர அளிக்கப்பட்ட நோட்டீஸ் சபாநாயகர் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.
 
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்க மத்திய அரசிடம் ஆந்திரா அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால் மத்திய அரசு கண்டுக்கொள்ளவில்லை. இதனால் நேற்று ஒய்.எஸ்.ஆர் காஸ்கிரஸ் கட்சி மக்களவையில் மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் அளித்தது.
 
இதைத்தொடர்ந்து தெலுங்கு தேசம் கட்சி பாஜகவுடனான கூட்டணியில் இருந்து விலகியது. இன்று தெலுங்கு தேசம் கட்சியும் மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் அளித்தது.
 
இந்நிலையில் ஆந்திர மாநில எம்.பி.க்கள் மக்களவையில் அமளியில் ஈடுபட்டனர். இதனால் நம்பிக்கை இல்லா தீர்மானம் நோட்டீஸை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அறிவித்தார்.