திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 31 மார்ச் 2021 (00:13 IST)

பாஜக நிர்வாகியின் மகன் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை !

பாஜக நிர்வாகியில் மகன் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பூனேவில் உள்ள சின்ச்வட் நகரத்தில் வசிப்பவர் பிரசன்னா சேகர் சின்சிவாடே021). இவரது தாய், சின்சிவாடே அங்குள்ள பிம்ப்ரியா மாநகராட்சியில் பாஜக உறுப்பினராக உள்ளார்.

இந்நிலையில், பிரசன்னா தனது உறவினருடன் ஒரு கார் ஷோரூமிற்குச் சென்றுவிட்டு பின்னர் தனது வீட்டிற்குச் சென்று துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

துப்பாக்கி சூடு சப்தம் கேட்டு உறவினர்கள் அவருடைய அறைக்குச் சென்றனர். அப்போது  ரத்தை வெள்ளத்தில் பிரசன்னா கீழே விழுந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமையில் அனுமதித்தனர்.  ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.