போதைப்பொருள் கடத்தல்....பாஜக பெண் நிர்வாகி கைது !
பாஜக நிர்வாகி ஒருவர் போதைப்பொருள் கடத்தியதாகக் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஒரு பகுதியில் அம்மாநில பாஜக மாநில இளைஞரணி செயலாளர் பமேலா கொஸ்வாமி என்பவர் போதைப்பொருள் கடத்திச் சென்றுள்ளார்.
மேலும், இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் பாஜக நிர்வாகி பமேலா கொஸ்வாமியிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
பமேலா கொஸ்வாமியுடன் தொடர்புடைய மேலும் சிலர் இவ்வழக்கில் சிக்கக்கூடும் எனத் தகவல் வெளியாகிறது.