திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 17 மே 2018 (12:04 IST)

கர்நாடகாவில் பாஜகவின் அரசியல் என்கவுண்டர் ஆரம்பம் - பிரகாஷ்ராஜ்

கர்நாடகாவில் பாஜக அரசியல் என்கவுண்டர் ஆரம்பித்துவிட்டது என நடிகர் பிரகாஷ்ராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 
கர்நாடகாவில், பல களோபரங்களுக்கும் இடையில் பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா இன்று காலை முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். இதை எதிர்த்து மஜத-காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சட்டசபை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நடிகர் பிரகாஷ்ராஜ் சமீபகாலமாக பாஜக அமைச்சர்களையும், நிர்வாகிகளையும் வருத்தெடுத்து வருகிறார். மேலும் கர்நாடக தேர்தலில் பாஜகவிற்கு எதிராக பிரகாஷ்ராஜ் பேசி வந்தார்.
 
இந்நிலையில் கர்நாடகாவில் பாஜக வை சேர்ந்த எடியூரப்பா இன்று காலை முதல்வராக பதவியேற்றதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அவர் டிவீட் செய்துள்ளார். அதில் கர்நாடகாவில் அரசியல் என்கவுண்டர் ஆரம்பித்துவிட்டது என்றும் அவர்களின் வேட்டையில் சிக்குபவர்கள் குறித்து எந்த தகவலும் வெளிவராது எனவும் எந்த சொகுசு விடுதியில் எந்த எம்எல்ஏ இருக்கிறார் என்று வரிசையாக பிரேக்கிங் நியூஸ் கொடுத்து உங்களை திகைக்க வைக்கப்போகிறார்கள் என்று டுவீட் செய்துள்ளார்.