பாஜக ஆட்சியமைக்க மோடி குதிரை பேரத்தை ஊக்குவிக்கிறார்; சித்தராமையா குற்றச்சாட்டு

Siddaramaiyah
Last Updated: புதன், 16 மே 2018 (16:25 IST)
கர்நாடகா மாநிலத்தில் பாஜக ஆட்சியமைக்க பிரதமர் மோடி குதிரை பேரத்தை ஊக்குவிக்கிறார் என்று சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.

 
கர்நாடகா மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானதை அடுத்து யார் ஆட்சியமைக்க போகிறார்கள் என்று முடிவாகாத நிலை ஏற்பட்டுள்ளது. பாஜக 104 இடங்களை கைப்பற்றினாலும் பெரும்பான்மைக்கு 112 இடங்கள் தேவைப்படுகின்றன. 
 
இதனால் 78 இடங்களை பிடித்த காங்கிரஸ், 37 இடங்களை பிடித்த மஜக கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்கும் முடிவில் உள்ளது. ஆனால் பாஜக வேட்பாளர் எடியூரப்பா ஆளுநரை சந்தித்து பெரும்பான்மை நிரூபிக்க கால அவகாசம் கேட்டார். இந்நிலையில் பாஜக கர்நாடகாவில் ஆட்சியமைக்க போராடி வருகிறது.
 
தங்கள் பக்கம் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுக்க போராடி வருகிறது. மஜக கட்சியின் முதல்வர் வேட்பாளர் குமாரசாமி, பாஜக தங்கள் பக்கம் எம்.எல்.ஏ.க்களை இழுக்க ரூ.100 கோடி பேரம் பேசி வருவதாக குற்றம்சாட்டினார்.
 
இதைத்தொடர்ந்து சித்தராமையா, கர்நாடகாவில் பாஜக ஆட்சியமைக்க பிரதமர் மோடி குதிரை பேரத்தை ஊக்குவிக்கிறார் என்று குற்றம்சாட்டியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :