வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 7 நவம்பர் 2019 (12:56 IST)

கவர்னர் சந்திப்பை ஒத்தி வைக்கும் பாஜக! – பரபரப்பான சூழலில் மகாராஷ்டிரா

மகாராஷ்டிரத்தின் ஆட்சியமைப்பதில் கட்சிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளால் ஆளுனரை சந்திக்க அனுமதி வாங்கியது பாஜக.

மகாராஷ்டிரத்தில் வெற்றிபெற்ற பாஜக – சிவசேனா கூட்டணி இடையே யார் ஆட்சி அமைப்பது என்பதில் கருத்து முரண்பாடுகள் தொடர்ந்து வருகின்றன. சிவசேனா ஆட்சியில் இரண்டரை வருடங்களை தங்களுக்கு தர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர். பெரும்பானமை இல்லாததால் பாஜகவும் ஆட்சியமைக்க முடியாத சூழல்.

இந்நிலையில் ஆளுனரை சந்திக்க தூதுக்குழுவை ஏற்பாடு செய்தது பாஜக. இன்று காலை 11.30 மணியளவில் தூதுக்குழு ஆளுனரை சந்திப்பதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த சந்திப்பில் ஆட்சி உரிமை கோருதல் அல்லது ஜனாதிபதி ஆட்சியை நடைமுறைப்படுத்துதல் குறித்த கோரிக்கைகளை பாஜக முன்வைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது சந்திப்பை பிற்பகல் 2 மணிக்கு ஒத்தி வைத்துள்ளனர் பாஜகவினர். பாஜக மாநில பிரதிநிதிகளுடன் பேசி தெளிவான முடிவை எட்டிய பிறகு ஆளுனரை சந்திக்கும் திட்டம் என பேசிக் கொள்ளப்படுகிறது. மேலும் ஆளுனரை சந்திக்கும் பாஜக ஆட்சி அமைக்க கோரிக்கை வைக்கப்போவதில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பு நிலை தொடர்ந்து வருகிறது.