இந்து வெறுப்பாளர்களை திமுக கொண்டாடுகிறது – எச்.ராஜா குற்றச்சாட்டு!

Prasanth Karthick| Last Modified வியாழன், 7 நவம்பர் 2019 (08:34 IST)
இந்து மத வெறுப்பாளர்களை திமுக கொண்டாடுவதாக எச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.

தஞ்சாவூரில் ராஜராஜ சோழனின் 1034வது சதயவிழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இத்தனை ஆண்டுகளாக தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தில் கொண்டாடப்பட்ட சதயவிழா, முதன்முறையாக ராஜராஜ சோழன் கல்லறை இருப்பதாக அறியப்படும் உடையாளூரில் நடைபெற்றது. இதற்கு பல அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவும் ட்விட்டர் மூலம் வாழ்த்து செய்திகளை பகிர்ந்திருந்தார்.

மேலும் சதயவிழாவுக்கு திமுகவினர் வாழ்த்து தெரிவிக்காதது குறித்து கருத்து தெரிவித்த எச்.ராஜா “பெருமைக்குரிய மாமன்னர் ராஜராஜசோழனின் சதய விழா பற்றி வாய் திறக்காத திமுக, ஆயிரக்கணக்கான இந்துக்களை படுகொலை செய்து ஏராளமான கோயில்களை சூறையாடிய திப்பு சுல்தானின் பிறந்த நாளை கொண்டாடுகிறது. திப்பு முதல் ஈவேரா வரை இந்துக்களை வெறுக்கும் அனைவரையும் திமுக கொண்டாடுகிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :