புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 6 நவம்பர் 2019 (17:37 IST)

காற்று மாசு காரணமாக மாஸ்க் மாட்டிய கடவுள்கள்! வைரல் புகைப்படம்!

காற்று மாசுபாடிலிருந்து காத்துக்கொள்ள மக்கள் மாஸ்க் அணிந்து கொள்வது போல கடவுள்களுக்கும் மாஸ்க் அணிவித்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

வட மாநிலங்களில் காற்று மாசுபாடு அபாய அளவை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இதனால் டெல்லி, பஞ்சாப், உத்தரபிரதேசம் ஆகிய பகுதிகளில் பல நகரங்களில் மக்கள் முகமூடி அணிந்தபடியே தங்கள் அன்றாட பணிகளை செய்து வருகிறார்கள்.

பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட்டு வெற்றிப்பெற்ற வாரணாசி தொகுதி அதிகமான கோவில்கள் உள்ள முக்கியமான புண்ணிய ஸ்தலம் ஆகும். வாரணாசியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாடு அபாய அளவான 500 புள்ளிகளை தாண்டி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மக்கள் பலர் மாஸ்க் அணிந்து கொண்டே பணிகளுக்கு சென்று வருகின்றனர்.

மேலும் அங்கு கோவில்களில் உள்ள கடவுள்களுக்கு காற்று மாசு ஏற்பட கூடாதென தெய்வ சிலைகளுக்கும் மாஸ்க் அணிவிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள முக்கிய கடவுள்களான காளி, துர்கை, சிவன் மற்றும் சாய் பாபா போன்ற கடவுளர்களுக்கு மாஸ்க் அணிவிக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வலம் வருகின்றன.

அங்குள்ள கடவுளர்களை மக்கள் உணர்வுப்பூர்வமாக வணங்கி வருவதால் இப்படி மாஸ்க் அணிவித்திருப்பதாக பக்தர்கள் சிலர் கூறியுள்ளனர்.