வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 8 மார்ச் 2024 (11:13 IST)

தொகுதி உடன்பாட்டில் சிக்கல்.. உடைகிறதா பாஜக - ஷிண்டே சிவசேனா கூட்டணி?

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக கூட்டணியில் ஷிண்டே சிவசேனா மற்றும் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் இருக்கும் நிலையில் தற்போது இந்த கட்சிகளுக்கு இடையே தொகுதி உடன்பாட்டில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் 48 தொகுதிகளில் இருக்கும் நிலையில் அதில் 32 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று பாஜக திட்டமிட்டுள்ளதாகவும் மீதமுள்ள 16 தொகுதிகளில் ஷிண்டே சிவசேனாவுக்கு 8 தொகுதிகள் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 4 தொகுதிகள் மற்ற சில கட்சிகளுக்கு நான்கு தொகுதிகள் என திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஷிண்டே கட்சிக்கு தற்போது 13 எம்பிக்கள் இருக்கும் நிலையில் 8 தொகுதிகள் மட்டும் கொடுத்தால் தற்போது இருக்கும் எம்பிக்களுக்கே  சீட் கொடுக்க முடியாத நிலை ஏற்படும் என்றும் அதனால் அவர்கள் உத்தவ் தாக்கரே அணிக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் ஷிண்டே தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் இதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாத பாஜக 8 தொகுதிகள் மட்டுமே தர முடியும் என பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஷிண்டே கடும் அதிருப்தியில் இருப்பதாகவும், மோடி அமித்ஷாவை  நம்பி வந்ததுக்கு கழுத்தை அறுக்காதீர்கள். எங்களுக்கு துரோகம் செய்தால் எதிர்காலத்தில் பாஜகவை மக்கள் நம்ப மாட்டார்கள் என்று கூறி வருவதாகவும் கூறப்படுகிறது.

Edited by Mahendran