1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 28 ஜனவரி 2020 (08:15 IST)

சோனியா காந்திக்கு குடியுரிமை கொடுத்தது சரியென்றால் இதுவும் சரிதான்: பாஜக பிரமுகர்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு குடியுரிமை கொடுத்தது சரி என்றால் அட்னான் சமி என்பவருக்கு பத்ம விருது கொடுத்ததும் சரிதான் என பாஜக பிரமுகர் சம்பித் பாத்ரா என்பவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
சமீபத்தில் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது என்பதும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உள்பட பலர் இந்த விருது விருது பெற்றதாக அறிவிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் பாகிஸ்தான் விமானப் படையில் பணிபுரிந்தவர் மகனான அட்னான் சமி என்பவருக்கு பத்ம விருது அறிவிக்கப்பட்டது
 
இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஜெய் மோடி என்று கூறினால் உடனே பாகிஸ்தானியருக்கு கூட பத்மவிருது கொடுத்துவிடுவார்கள் என கொடுப்பதால் என மஹாராஷ்டிரா சிறுபான்மையினர் மேம்பாட்டு அமைச்சர் நவாப் மாலிக் தனது டுவிட்டரில் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார் 
 
இதற்கு பதிலளித்த காங்கிரஸ் பிரமுகர்  சம்பித் பாத்ரா அவர்கள் கூறியதாவது: இத்தாலியில்  முசோலினி மற்றும் ஹிட்லருடன் நெருங்கிய தொடர்பு உள்ளவர் என்று கூறப்படுபவர் தான் சோனியாவின் தந்தை. ஆனால் அவருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது 
 
சோனியாவுக்கு இந்திய குடியுரிமை கொடுத்ததுசரி என்றால் அட்னான் சமிக்கு பத்ம விருது கொடுத்ததும் சரிதான் என்றும், அதுமட்டுமின்றி அவர் பத்ம விருதுக்கு முழு தகுதி உடையவர் என்றும் பதிலளித்துள்ளார்.