1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Rajastan takes conclusion against CAA

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம்; கேரளா, பஞ்சாப் மாநிலங்களைத் தொடர்ந்து களத்தில் இறங்கிய ராஜஸ்தான்

ராஜஸ்தான்
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ராஜஸ்தான் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடந்து வரும் நிலையில் எதிர்கட்சிகள் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து ஆங்காங்கே பேரணி நடத்தி வருகின்றனர்.

இதனிடையே குடியுரிமை திருத்த சட்டத்தை எதிராக கேரள மாநில சட்டசபையிலும் பஞ்சாப் மாநில சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இதனை தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்திலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அம்மாநில சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
பசியில் தவித்த கரடிக் குட்டிகளுக்கு பாலூட்டிய நரி... இதல்லவோ பாசம் !