வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 10 நவம்பர் 2020 (12:06 IST)

ஆட்சியை பிடிக்கிறது பாஜக கூட்டணி: மீண்டும் நிதிஷ்குமார் முதல்வரா?

பீகார் சட்ட மன்ற தேர்தல் சமீபத்தில் மூன்று கட்டங்களாக நடந்த நிலையில் இன்று காலை 8 மணி முதல் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் அதன் பின்னர் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் எண்ணப்பட்டு வந்த நிலையில் அவ்வப்போது பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணியின் மாறி மாறி முன்னிலையில் இருந்து வந்தது
 
இந்த நிலைய்ல் சற்று முன் வெளியான தகவலின்படி பாஜக கூட்டணியில் 135 இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணி 95 இடங்களிலும் மற்றவை 11 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது 
 
பீகார் மாநிலத்தில் மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் 122 தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஆட்சி அமைக்க முடியும் என்பதால் பாஜக கூட்டணி தற்போது 131 இடங்களில் முன்னிலையில் இருப்பதால், முன்னிலையில் இருக்கும் அனைத்து தொகுதிகளிலும் வென்றால் பாஜக கூட்டணி ஆட்சி அமைத்து விடும் என்பதும் நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராக வருவார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
ஆனால் அதே நேரத்தில் காங்கிரஸ் கூட்டணி 95 இடங்களில் முன்னிலையில் இருப்பதால் இன்னும் 20 இடங்களுக்கும் கூடுதலாக முன்னிலை பெற்றால் ஆட்சி மாறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் பாஜக தேர்தல் முடிவுகள் குறித்து பாஜக பிரமுகர் நாராயணன் கூறியபோது பீகாரில் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம் பற்றிய எதிர்க்கட்சிகளின் பொய் பிரச்சாரங்களை மக்கள் ஏற்கவில்லை என்பதே தேர்தல் முடிவுகள் காட்டுகிறது என்று கூறியுள்ளார்