வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 10 நவம்பர் 2020 (08:54 IST)

பீகார் தேர்தல் முடிவுகள்: ராஷ்ட்ரிய ஜனதாதளம்-காங்கிரஸ் கூட்டணி முன்னிலை

பீகார் மாநில சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில் தற்போது முதல்கட்ட முடிவுகள் வெளியாக தொடங்கியுள்ளன.
 
பீகார் சட்டப்பேரவையில் மொத்த இடங்கள் 243 என்ற நிலையில் தற்போது 128 தொகுதிகளின் முன்னிலை நிலவரம் தெரிய வந்துள்ளது. அதில் ராஷ்ட்ரிய ஜனதாதளம்-காங்கிரஸ் கூட்டணி 69 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றது. அதேபோல் ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி 53 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றது. மற்றவை 6 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றது. 
 
தபால் வாக்குகளில் பாஜக கூட்டணி 63 இடங்களிலும் ஆர்ஜேடி கூட்டணி 61 இடங்களிலும் முன்னிலை என்றும், எல்ஜேபி 2 இடங்களிலும் மற்ற கட்சிகள் 3 இடங்களிலும் முன்னிலை என்றும் தகவல் வெளிவந்துள்ளது
 
தொடக்க நிலையில் இரு கூட்டணியும் சம அளவில் முன்னிலை உள்ள நிலையில் போகப்போக தான் யார் ஆட்சி அமைப்பது? அல்லது தொங்கு சட்டமன்றமா? என்பது தெரிய வரும்