செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 2 ஆகஸ்ட் 2019 (19:45 IST)

டிக் டாக் மோகத்தில் பைக் சாகசம் .. தலை குப்புற விழுந்த இளைஞர்!

டிக் டாக் மோகத்தில் இன்று இளைஞர் முதல் பெரியோர் வரை பல ஆபத்தான விடயங்களில்  ஈடுபட்டு வருகின்றனர்.  இதுகுறித்து நாள் தோறும் செய்திகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில்  டிக் டாக் மோகத்தால் ஒருஇளைஞர் பைக் சாகசம் செய்ய முயன்று, வாகனத்துடன் தலைகுப்புற விழுந்து படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
மும்பை தாராவி பகுதியில் வசிக்கும் சில இளைஞர்கள் கூட்டாக சேர்ந்துகொண்டு,  பைக் ஸ்டண்ட்களை செய்து, வலைதளங்களில் தங்கள் திறமையைக் காட்டுவதற்காகவும், வீடியோக்களுக்கு லைக் கிடைப்பதற்க்காகவும் இவ்வாறு செய்து வருகின்றனர்.
 
இந்நிலையில் இப்பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞர், பைக் ஸ்டண்ட் செய்யும் போது, பைக்கை நேராக நிற்க வைக்க முயன்று நிலைதடுமாறி  கீழே விழுந்து முதுகெலும்பு உடைந்தது. முகத்தில் சிராய்ப்பு ஏற்பட்டது. இதனால் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.