காதலனின் தாயாரை கம்பத்தில் கட்டி வைத்த காதலியின் தந்தை : பகீர் சம்பவம்

kadalur
Last Modified வெள்ளி, 19 ஜூலை 2019 (19:00 IST)
கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே உள்ள விளாங்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த பொன்னுச்சாமி. இவரது மனைவி செல்வி . இந்த தம்பதிக்கு  ஒரு மகன் (25) உள்ளார். இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த கொளஞ்சி (60). என்பவரின் மகளும் காதலித்து வந்துள்ளனர். 
இந்நிலையில் கடந்த மாதம் தனது மகளுக்கு வேறு ஒரு வரன் பார்த்துள்ளார். ஆனால் இது பிடிக்காமல் காதலலர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறிவிட்டனர். இதனால் இரு வீட்டாருக்கும் இடையே தொடர்ந்து பிரச்சனை இருந்து வந்துள்ளது.அதாவது பெண்ணுக்கு நிச்சயம் ஆனநிலையில் தனது மகளை அழைத்துச் சென்றுள்ளதால் பொன்னுச்சாமி துக்கத்திலும் மன  உளைச்சலில் இருந்ததாகத் தெரிகிறது.
 
இந்நிலையில் அப்பெண்ணின் தந்தை, வாலிபரின் தயாரிடம் தன் பெண் எங்கே எனக் கேட்டு பிரச்சனை செய்து வந்துள்ளார். 
 
இந்நிலையில் இன்று செல்வியை கம்பத்தில் கட்டி வைத்து  பெண்ணின் தந்தை தாக்கினார். இதில் செல்வி பலத்த காயம் அடைந்த செல்வியை அக்கம் பக்கத்தவர்கள் மீட்டு விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதனைத்தொடர்ந்து செல்வி போலீஸிடம் புகார் அளித்தார். இந்தப்புகாரின் அடிப்படையில் போலீஸார் கொளஞ்சியை கைது செய்து விசாரணையை நடத்தி வருகின்றனர். 
 
 


இதில் மேலும் படிக்கவும் :