செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : ஞாயிறு, 25 அக்டோபர் 2020 (09:29 IST)

பிரச்சாரத்திற்கு சென்ற வேட்பாளர் சுட்டுக் கொலை! – பீகார் அரசியலில் பரபரப்பு!

பீகாரில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்கு சேகரிக்க சென்ற வேட்பாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் சட்டமன்ற தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் முதற்கட்ட தேர்தல் 28ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பீகாரின் ஷிகோர் மாவட்டத்தின் ஹத்சார் மாவட்டத்தில் ஜனதாதள ராஷ்டிரவாடி கட்சி வேட்பாளர் நாராயண் சிங் என்பவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது அவரது தொண்டர் கூட்டத்தில் கலந்து வந்த சில ஆசாமிகள் திடீரென துப்பாக்கியால் அவரை சரமாரியாக சுட தொடங்கினார்கள். இதனால் அவர் குண்டடிப்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனால் பீகாரில் பரபரப்பு எழுந்துள்ளது.