எனது வெற்றியை திருட முயற்சிக்கின்றார் ஜோபைடன்: டிரம்ப் குற்றச்சாட்டு!
அமெரிக்க அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த இரண்டு நாட்களாக எண்ணப்பட்டு வரும் நிலையில் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் கிட்டத்தட்ட வெற்றி பெறும் நிலையில் இருக்கிறார். அவர் விரைவில் வெற்றி பெற்றார் என்ற அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு எதிராக டிரம்ப் தரப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தனது டுவிட்டரில் கூறிய போது நாங்கள் வரலாறு காணாத வகையில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளோம். சட்டப்படி வாக்குகளை எண்ணினால் நானே வெற்றி பெறுவேன். இந்த தேர்தலில் நாங்கள் பெற்ற வெற்றியை எங்களிடமிருந்து திருட ஜோபைடன் குழு முயற்சிக்கின்றது. பல முக்கிய மாகாணங்களில் நான் தான் வெற்றி பெற்றுள்ளேன். எனவே நான்தான் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருவதாகவும் தற்போது வந்துள்ள தகவலின்படி ஜோபைடன் வெற்றியின் விளிம்பில் இருப்பதாகவும் எந்த நேரமும் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன
இதுவரை வரலாறு காணாத வகையில் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்போது அதிபர் வேட்பாளர் ஒருவரே வாக்கு எண்ணிக்கை குறித்து குற்றஞ்சாட்டியுள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது