1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 6 நவம்பர் 2020 (10:55 IST)

பிரச்சாரம் முடிந்தது: நாளை பீகாரில் இறுதிக்கட்ட தேர்தல்!

பீகார் மாநிலத்தில் தற்போது சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. அக்டோபர் 28ம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவும், நவம்பர் 7ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் முடிவடைந்த நிலையில் தற்போது மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது 
 
மூன்றாம் கட்ட வாக்குப்பதிவுக்கன பிரசாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. இதனை அடுத்து நாளை தேர்தல் நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது 170 தொகுதிகளில் இறுதி கட்ட வாக்குப்பதிவு நடைபெற இருப்பதாகவும் இந்த தேர்தலில் 1204 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
நேற்று மாலை இறுதிக்கட்ட பிரசாரம் செய்த முதல்வர் நிதிஷ்குமார் திடீரென தான் போட்டி இடும் கடைசி தேர்தல் இதுதான் என உருக்கமாக கூறியதை அடுத்து அவருக்கு ஆதரவாக அனுதாப ஓட்டுக்கள் குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் நிதிஷ் குமார் முதல்வர் ஆவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கருத்துக் கணிப்புகள் ஏற்கனவே தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நாளை வாக்குப்பதிவு முடிவடைந்த பின்னர், நவம்பர் 10ஆம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்படும் என்றும் அன்று இரவே அனைத்து தொகுதிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஆட்சி அமைப்பது யார் என்பது தெரிந்து விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது