திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 22 ஜனவரி 2024 (16:35 IST)

நூற்றாண்டு போராட்டம் முடிவுக்கு வந்தது.! பிரதமர் மோடி பெருமிதம்..!!

modi speech
அயோத்தி ராமர் கோவிலுக்காக பாடுபட்ட கரசேவர்களுக்கு இருகரம்கூப்பி நன்றி  தெரிவிப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
 
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா பிரதமர் மோடி முன்னிலையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. பின்னர் பேசிய பிரதமர் மோடி, கூடாரத்தில் இருந்த பால ராமருக்கு தற்போது அழகிய கோயில் கட்டப்பட்டுள்ளது என்றார்.
 
இந்த நேரத்தில் கடவுள் ராமர் நமக்கு ஆசிர்வாதம் அளிக்கிறார் என்றும் இன்றைய நாள் வரலாற்று நிகழ்வாக அமைந்துள்ளது என்றும் பிரதமர் தெரிவித்தார். 1000 ஆண்டுகளுக்கு பிறகும் இந்த நாளை மக்கள் நினைவில் வைத்திருப்பார்கள் என குறிப்பிட்ட அவர், கால சக்கரத்தில் இன்றைய நாள் ஒரு பொற்காலம் என பெருமிதம் தெரிவித்தார்.
 
கோயில் கட்டுவதற்கு இவ்வளவு காலம் ஆனதற்கு ராமரிடம் நான் மன்னிப்பு கோருகிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். அடிமைத்தனத்தில் இருந்து நாம் விடுதலை பெற்றுள்ளோம் என்றும் ராமர் கோயிலுக்கான நூற்றாண்டு போராட்டம் இன்று முடிவுக்கு வந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
 
ராமர் கோயில் கட்ட வழிவகை செய்த இந்திய நீதித்துறைக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து சட்டப்படி அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது என்றார்.
 
ஒட்டுமொத்த தேசமே ராமர்கோயில் திறப்பை தீபாவளி போன்று இன்று கொண்டாடுகிறது என்றும் ராமேஸ்வரம் அரிச்சல் முனையில் காலச்சக்கரம் மாறுவதை உணர்ந்தேன் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

 
ராமேஸ்வரம் முதல் சரயு நதிக்கரை வரை ராம நாமமே ஒலிக்கிறது எனக்கு கூறிய பிரதமர் மோடி,  ராமர் கோயிலுக்காக பாடுபட்ட கரசேவர்களுக்கு இருகரம்கூப்பி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டார்.