திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 22 ஜனவரி 2024 (14:54 IST)

ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் அத்வானி வரவில்லை: என்ன காரணம்?

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு அடிப்படையாக செயல்பட்டவர் முன்னாள் துணை பிரதமர் அத்வானி என்பதும் ஆனால் இன்று ராமர் கோவில் திறக்கப்பட்ட நிலையில் அவர் அதில் பங்கேற்கவில்லை என்றும் தகவல் வழியாக உள்ளது 
 
அயோத்தியில் கடும் குளிர்  காரணமாக அத்வானி ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்கவில்லை என அவரது அரப்பினர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அத்வானி எழுதிய கட்டுரையில் கூறியிருப்பதாவது
 
கடந்த 1990 செப்டம்பர், 25-ம் தேதி குஜராத்தின் சோம்நாத் பகுதியில் இருந்து உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்திக்கு ராம ரத யாத்திரை மேற்கொண்டோம். அதில் பிரதமர் மோடியும் பங்கேற்றார். அப்போது அவர் பிரபலமானவர் அல்ல.
 
ஆனால், அப்போதே அயோத்தியில் தனக்கு பிரம்மாண்ட கோயில் கட்ட பிரதமர் மோடியை, பகவான் ராமர் தேர்வு செய்துள்ளார். அதுதான் இப்போது செயல் வடிவம் கண்டுள்ளது.
 
அந்த யாத்திரையின்போது அரங்கேறிய சம்பவங்கள் எனக்குள் மாற்றத்தை தந்தன. எங்களது ரதம் செல்லும் இடமெல்லாம் யாரென தெரியாத கிராம மக்கள் எங்களுக்கு அதீத வரவேற்பு கொடுத்தனர். அது பகவான் ராமருக்கு கோயில் வேண்டுமென மக்கள் விரும்பியதன் வெளிப்பாடு. வரும் 22-ம் தேதி ராமர் கோயிலில் கவுரவம் மட்டுமல்லாது மக்களின் நம்பிக்கையும் மீட்டெடுக்கப்பட உள்ளது. இவ்வாறு அத்வானியின் குறிப்பில் உள்ளது.
 
Edited by Mahendran