இன்று பூடான் மன்னர்.. நாளை பிரதமர் மோடி.. கும்பமேளாவில் புனித நீராடும் விஐபிக்கள்..!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பிராயாக்ராஜ் என்ற நகரில் கும்பமேளா நிகழ்ச்சி நடந்து கொண்டு வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் போது திரிவேணி சங்கமத்தில் கோடிக்கணக்கான மக்கள் புனித நீராடி வருகின்றனர். இந்த நிலையில் நாளை அதாவது பிப்ரவரி 5ஆம் தேதி பிரதமர் மோடி புனித நீராட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை அடுத்து திரிவேணி சங்கமம் பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளதாகவும் அந்த பகுதி முழுவதும் பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையினர் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் இதுவரை கிட்டத்தட்ட 35 கோடி பேர் புனித நீராடி உள்ளதாகவும் கும்பமேளா நிகழ்ச்சி நிறைவு பெற இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில் புனித நீராடும் பக்தர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் பூட்டான் அரசர் புனித நீராடியதாக தகவல் வெளியாகி உள்ளன. அவருடன் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் புனித நீராடினார். இந்த தகவலை யோகி ஆதித்யநாத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இது குறித்த புகைப்படம் மற்றும் வீடியோக்களையும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Edited by Siva