மகா கும்பமேளாவில் பக்தர்கள் பலியான விவகாரம்.. நாடாளுமன்றத்தில் பெரும் அமளி..!
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பாதுகாப்பு குறைபாடு காரணமாகத்தான் பக்தர்கள் பலியாகியதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரியதால், நாடாளுமன்ற நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த வாரம் தொடங்கிய நிலையில், பிப்ரவரி ஒன்றாம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு மக்களவை மற்றும் மாநிலங்களவை கூடியது. அவை தொடங்கியதும், எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
மகா கும்பமேளா நெரிசலில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் பலியாகிய சம்பவம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து கோஷமிட்டு வருகின்றனர். இதனால் நாடாளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஒரு புறம் எம்பிக்கள் கோஷமிட்டு அமளியில் ஈடுபட்டுள்ள நிலையில், இன்னொரு புறம் அவை நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆனால், அவைத்தலைவர் இருக்கையை சுற்றி எதிர்க்கட்சிகள் எம்பிக்கள் முழக்கம் இட்டதால், நாடாளுமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Edited by Siva