தொடர்புடைய செய்திகள்
- சத்தீஸ்கர், ராஜஸ்தான், ம.பியில் ஆம் ஆத்மி தனித்து போட்டி.. I.N.D.I.A கூட்டணிக்கு சிக்கலா?
- குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 2,500 உதவித் தொகை: சோனியா காந்தி அறிவிப்பு..!
- நியூசிலாந்து பொதுத்தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வி: பிரதமராகும் எதிர்க்கட்சி தலைவர்..!
- மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள் நியமனம்.. தேர்தலுக்கு தயாராகும் அதிமுக..!
- 5 மாநில சட்டமன்ற தேர்தல்: 2 மாநிலங்களில் இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்..!
தகுதியுள்ள பயனாளிகளுக்கு மட்டும் சலுகைகள்.. உண்மையை சொல்லி ஓட்டு கேட்கும் தெலுங்கானா முதல்வர்..!.
தெலுங்கானா மாநில தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கும் நிலையில் தகுதியுள்ள பயனாளர்களுக்கு மட்டும் சலுகைகள் வழங்கப்படும் என உண்மையைச் சொல்லி அம்மாநிலத்தின் ஆளுங்கட்சியான பாரத ராஷ்டிர சமிதா கட்சி வாக்குறுதி வழங்கி உள்ளது.
தெலுங்கானாவில் நவம்பர் 30ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் சந்திரசேகர் ராவ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்
அதில் தகுதி உள்ள பயனாளிகளுக்கு ரூபாய் 400 விலையில் கேஸ் சிலிண்டர் வழங்கப்படும் என்றும் தகுதியுள்ள பயனாளர்களுக்கு ரூபாய் 15 லட்சம் சுகாதார காப்பீடு அளிக்கப்படும் என்றும் தகுதி உள்ள பயனாளர்களுக்கு சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளையும் ஆட்சிக்கு வந்த ஆறு முதல் ஏழு மாதங்களில் நிறைவேற்றுவோம் என்றும் கடந்த தேர்தல் அறிக்கைகள் குறிப்பிடப்பட்ட 90% சமூக நல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி மகளிர்களுக்கு மாதம் ரூபாய் 2500 உள்பட பல்வேறு சலுகைகளை வாரி வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
