1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 17 ஜூன் 2019 (18:50 IST)

தண்ணீர் பக்கெட்டுக்குள் விழுந்து குழந்தை பலி !அதிர்ச்சி சம்பவம்

போபாலில் 3வயதுக் குழந்தை வாளியில் உள்ள தண்ணீரில் விழுந்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போபாலில் வசித்துவருபவர் சுரேந்திர ரகுவன்ஷி. இவருக்கு திருமணமாகி 3 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்த சம்பவம் நடைபெற்ற அன்று குழந்தை தன் தாயுடன் படுத்து உறங்கியுள்ளது. சனுக்கிழமை அன்று காலையில் படுக்கையில் படுத்திருந்த குழந்தையைக் காணவில்லை.
 
பின்னர் வீட்டைச் சுற்றிலும் குழந்தையைத்தேடினார்கள். அப்போது குழந்தை குளியறையில் தண்ணீர் ஊற்றிவைத்திருகும் வாளியில் விழுந்ததை கண்டுபிடித்தனர்.பின்னர் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.  
 
மருத்துவர்கள் குழந்தைக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டது.ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் குழந்தை உயிரிழந்துவிட்டது.
 
இதுகுறித்து போலீஸார் விசாரித்தனர். அதில் சுரேந்திராவுக்கும் மனைவிக்கும் சிலநாட்களாக உடல் உடல்நிலை சரியில்லாத நிலையில் இரவில் மாத்திரை போட்டு படுத்துள்ளனர். அந்த அயற்சியில் தூங்கிவிட்டனர். அப்போது குழந்தை தானே எழுந்து குளியரைக்குச்சென்றுள்ளது. அங்கு சென்று தண்ணீர் இருந்த வாளிக்குள் விழுந்துள்ளதாகத் தெரிகிறது.
 
இந்த சம்பம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.