திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 14 செப்டம்பர் 2018 (15:25 IST)

கொலை செய்வது பார்ட் டைம்; அதிர்ச்சியளிக்கும் தையல்காரரின் வாக்குமூலம்

மத்தியப்பிரதேச மாநிலம்  போபால் பகுதியைச் சேர்ந்த ஆதேஷ் கம்ப்ரா என்பவர் கடந்த 8 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்ட கொலைகள் செய்துள்ளதாக அளித்த வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
மத்திய பிரதேச மாநிலம் போபால் பகுதியைச் சேர்ந்த ஆதேஷ் கம்ப்ரா என்பவர் தையல்காரராக பணிபுரிந்து வருகிறார். கடந்த வாரம் இவரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர் அளித்த வாக்குமூலம் காவல்துறையினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த 8 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்ட கொலைகள் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். கொலை செய்யப்பட்டவட்கள் அனைவரும் நெடுஞ்சாலைகளில் செல்லும் லாரி டிரைவர்கள் மற்றும் அவர்களின் உதவியார்கள் என்று தெரிவித்துள்ளர்.
 
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
அதிக பணம சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே கடந்த 8 ஆண்டுகளாக கொலை செய்வதை பகுதி நேர வேலையாக செய்து வந்தேன். சரக்கு பொருட்களுடன் வரும் லாரிகளின் ஓட்டுநர்களை கொன்றுவிட்டு அதில் இருக்கும் பொருட்களை திருடி விற்பது வழக்கம் என்று கூறியுள்ளார்.
 
இவர் காவல்துறையினரிடம் திருடனாக சிக்கியுள்ளார். கடந்த மாதம் 12ஆம் தேதி 50டன் இரும்பு கம்பிகளுடன் சென்ற லாரி மாயமாகியது. இதுதொடர்பாக காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டது.
 
இதுதொடர்பான விசாரணையில் ஆதேஷ் கம்ப்ரா சிக்கினார்.