வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 15 ஏப்ரல் 2019 (16:20 IST)

குளிக்காத கணவன்; கும்பிடு போட்டு ஓடிய மனைவி!

மந்திய பிரதேசத்தில் உள்ள போபாலில் இளம் பெண் ஒருவர் கணவன் குளிப்பதில்லை என காரணம் கூறி விவாகரத்து கோரியுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 
கணவன் குடிக்கிறான், அடித்து கொடுமை படுத்துகிறான், வேறு ஒரு பெண்ணுடன் தொடர்ப்பு உள்ளது போன்ர காரணங்களுக்காக விவகாரத்து வாங்கி, இப்போது குறட்டை விடுகிறான் என்கிற காரணத்திற்காக விவகாரத்தும் வாங்கும் நிலை இப்போது வந்துவிட்டது. 
 
அந்த வகையில், போபாலில் திருமணமாகி ஒரு வருடமே ஆன நிலையில் இளம் பெண் ஒருவர் எனது கணவர் வாரம் ஒருமுறை மட்டுமே குளிக்கிறார், ஒழுங்காக சேவ் செய்வதில்லை என்று விவகாரத்து கேட்டுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
நீதிமன்றம் இவர்களை 6 மாதம் பிரிந்து இருக்கும் படி தற்காலிகமாக உத்தரவிட்டுள்ளது. அதன் பிறகு விவாகரத்து குறித்து நீதிமன்றம் முடிவு செய்யும் என தெரிகிறது.