1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: செவ்வாய், 14 டிசம்பர் 2021 (16:19 IST)

வங்கிகள் திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் செய்வதாக அறிவிப்பு

வங்கி சட்ட திருத்த மசோதாவை  எதிர்த்து வரும் வங்கி ஊழியர்கள்  வேலை நிறுத்தம் செய்யவுள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளது.

 

பிரதமர் மோடி தலைமையிலான  பாஜ அரசு தேசிய வங்கிகளை தனியார் மாயம் ஆக்கி வருகினறனர். இந்த அறிவிப்புக்கு பல்வேறு தர்ரப்பில் இருந்து எதிர்ப்பு எழுந்து வருகிறது.

மேலும் அரசின் இந்த அறிவிப்புக்கு எதிராக வங்கி அதிகாரிகள், ஊழியர்கள்மேலாளர்கள் உள்ளிட்ட பலரும் இந்த மசோதாவை திரும்ப பெற  கோரி வரும் ஆகிய தேதிகளில் வாங்கி ஊழியர்கள் நாடு தழுவிய அளவில் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்தனர். எனவே இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில், மசோதாவை தாக்கல் செய்யவில்லை என அரசு உறுதியளிக்கவில்லை.

இந்நிலையில், வரும் டிசம்பர் 16, 17 ஆகிய தேதிகளில் வங்கிகளை தனியார்மயமாக்கும் மசோதாவை கண்டித்து திட்டமிட்டபடி வங்கிகள் வேலைநிறுத்தம் செய்வதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.