செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 28 ஆகஸ்ட் 2021 (12:41 IST)

செப்.-ல் 12 நாட்களுக்கு வங்கி விடுமுறை!!!

செப்டம்பர் மாதத்தில் 12 நாட்கள் வரை வங்கிகள் செயல்படாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

 
செப்டம்பர் மாதம் துவங்க இன்னும் 4 நாட்கள் உள்ள நிலையில் அம்மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதில் 12 நாட்கள் வரை வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 
 
விடுமுறை நாட்கள்:
 
1. செப். 5, 12, 19, 26 ஆம் தேதிகளில் ஞாயிறு விடுமுறை. 
2. செப்., 11 ஆம் தேதி, 2 வது சனிக்கிழமை மற்றும் விநாயகர் சதுர்த்தி, 25 ஆம் தேதி 4 வது சனிக்கிழமை.
3. செப். 8 ஆம் தேதி – ஸ்ரீமந்த சங்கரதேவரின் திதியை முன்னிட்டு கவுகாத்தியில் வங்கிகள் செயல்படாது.
4. செப். 9 ஆம் தேதி – தீஜ் தினத்தை முன்னிட்டு ஹரித்தாலிகா மற்றும் கேங்டாக் பகுதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை.
5. செப். 17 ஆம் தேதி – கர்ம பூஜையை முன்னிட்டு ராஞ்சியில் வங்கிகள் இயங்காது.
6. செப். 20 ஆம் தேதி – இந்திரஜத்ரா பண்டிகை காரணமாக கேங்டாக் பகுதியில் வங்கிகள் செயல்படாது.
7. செப்., 21 ஆம் தேதி – ஸ்ரீ நாராயண குரு சமாதி நாளை முன்னிட்டு கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.