திங்கள், 11 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 17 டிசம்பர் 2021 (07:16 IST)

2வது நாளாக தொடரும் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்: ரூ.18 ஆயிரம் கோடி முடக்கம்!

வங்கி ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்தம் செய்வதன் காரணமாக 18 ஆயிரம் கோடி மதிப்புள்ள காசோலைகள் மூடப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் டிசம்பர் 16 மற்றும் 17 ஆகிய இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்திருந்தனர். 
 
இந்த அறிவிப்பின்படி நேற்று நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடங்கியது. மத்திய அரசின் தனியார்மயமாக்கும் கொள்கையை எதிர்த்து வங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் வேலை நிறுத்தம் செய்ததால் 18 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான காசோலைகள் பரிவர்த்தனை முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
தமிழகத்தில் மட்டும் 90 ஆயிரம் வங்கிப் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு இருப்பதாகவும் இதன் காரணமாக வங்கி வாடிக்கையாளர்கள் பெரும் அவர்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது