செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva

இன்றும் நாளையும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்: வங்கி பரிமாற்றங்கள் பாதிக்கப்படுமா?

இன்றும் நாளையும் வங்கி ஊழியர்கள் திடீரென வேலை நிறுத்தம் செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வாங்கிய பரிமாற்றங்கள் பாதிக்கப்படும் என்ற அச்சம் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
நாடு தழுவிய அளவில் இன்றும் நாளையும் திட்டமிட்டபடி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் நடைபெறும் என அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 
 
வங்கிகள் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை எழுப்பி இந்தியா முழுவதும் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் இன்று போராட்டம் செய்கின்றனர்
 
தமிழகத்தில் மட்டும் இந்த போராட்டத்தில் 90 ஆயிரம் பேர் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றும் நாளையும் வங்கிகள் முழு அளவில் செயல்படாததால் வங்கி பரிமாற்றம் பெருமளவில் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது