1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 16 டிசம்பர் 2021 (13:15 IST)

இன்றும், நாளையும் ஸ்டிரைக்: முடங்கிப்போன பண பரிவர்த்தனைகள்!!

வேலை நிறுத்தம் காரணமாக இன்று தமிழகத்தில் மட்டும் 6,500 வங்கிகள், நாடு முழுவதும் 1,18,000 வங்கிகள் செயல்படவில்லை. 

 
இன்றும் நாளையும் வங்கி ஊழியர்கள் திடீரென வேலை நிறுத்தம் செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாகவே நாடு தழுவிய அளவில் இன்றும் நாளையும் திட்டமிட்டபடி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் நடைபெறும் என அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்தது. 
 
அதன்படி வங்கிகள் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை எழுப்பி இந்தியா முழுவதும் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் இன்று போராட்டம் செய்கின்றனர். தமிழகத்தில் மட்டும் இந்த போராட்டத்தில் 90,000 பேர் கலந்து கொள்ள உள்ளனர். 
 
வேலை நிறுத்தம் காரணமாக இன்று தமிழகத்தில் மட்டும் 6,500 வங்கிகள், நாடு முழுவதும் 1,18,000 வங்கிகள் செயல்படவில்லை. மேலும் இதன் மூலம் நாடு முழுவதும் ரூ. 5,000 கோடிக்கு பணபரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ரூ.500 கோடி அளவுக்கு பணபரிவர்த்தனை பாதிக்கப்பட்டு இருக்கிறது. 
 
அதோடு சுமார் 2 லட்சம் காசோலைகள் தேங்கி உள்ளன. நாடு முழுவதும் 10 லட்சம் காசோலைகளை பணபரிவர்த்தனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல்.