'லியோ' பட தயாரிப்பாளரின் மகன் திருமண வரவேற்பில் பங்கேற்ற விஜய்
மாஸ்டர், லியோ பட தயாரிப்பாளரின் மகன் திருமண வரவேற்பில் கலந்துகொண்டார் நடிகர் விஜய்.
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ். இந்த நிறுவனம் சார்பில், அசுவதம், குரு, சர்பத், துக்ளக் தர்பார், மகான், காத்துவாக்குல் ரெண்டு காதல், மாஸ்டர் உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியுள்ளர்.
சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய், திரிஷா, மன்சூர் அலிகான், அர்ஜூன், சஞ்சய் தத் ஆகியோரின் நடிப்பில் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியான படம் லியோ.
இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று ரூ.600 கோடிக்கு மேல் வசூல் குவித்து வருகிறது.
இந்த நிலையில், 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவன உரிமையாளரான லலித்குமாரின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர் விஜய், மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் நேற்றிரவு கலந்து கொண்டு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.