திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 27 டிசம்பர் 2022 (22:56 IST)

புதுச்சேரி: புத்தாண்டு கொண்டாட வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

pudhucherry
சீனாவில் உருமாறிய கொரோனா வைரஸான பிஎஃப்-7 ஒமைக்கான்  பரவலாம் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் அண்டை நாடான இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அனைத்து மா நில அரசுகளுக்கும் கடிதம் எழுதி, பொதுஇடங்களில் மக்கள் மாஸ்க் அணிய வேண்டும் என்று அதில் கூறியிருந்தார்.

இதை ஒவ்வொரு  மாநில அரசுகளும் செயல்படுத்தி வரும் நிலையில் இன்று புதுச்சேரி அரசு இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் வெளியிட்டுள்ளது. 

இதுகுறித்து புதுச்சேரி அரசு கூறியுள்ளதாவது:

பொது இடங்களிலும், திரையரங்குகள் முக்கவசம் அணிந்து கொண்டுதான் வர வேண்டும் என்றும் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டுமென்றும், புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடும் நபர்கள் கொரொனா தடுப்பூசி பெற்றதற்கான சான்றின் நகல் வைத்திருக்க வேண்டும் என்றும், கடகறையில் முக்ககவம் அணிய வேண்டும் , சுற்றுலாப் பயணிகள் தடுப்பூசி சான்றிதழ் காட்ட வண்டும் என தெரிவித்துள்ளது.

இதேபோல் இன்று முதல்வர் பசுவராஜ் பொம்மை தலைமையிலான அரசு இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு  கட்டுப்பாடுகள் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.