1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 10 ஜனவரி 2023 (15:05 IST)

உத்தரபிரதேசம்: கடும் குளிரில் இருதய நோயாளிகள் 98 பேர் மரணம்...

உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பாஜக இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது.

இந்தியாவில் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமாக இம்மாநிலம்  உள்ளது.

பொதுவாக வட மாநிலங்களில் ஒவ்வொரு ஆண்டும்  டிசம்பர் மற்றும் ஜனவரி ஆகிய மாதங்களில் கடும் குளிர் நிலவும்.

சமீபத்தில், உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பல பகுதிகளில் தற்போது கடும் குளிர் நிலவுவதால், இந்தக் குளிரால் 25 பேர் இதய நோயால்  உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது.

இந்த நிலையில், உ.பி., மாநிலம் கான்பூரில் தற்போது நிலவும் கடும் குளிரா கடந்த 5 நாட்களில் மட்டும் 98 பேர் உயிரிழந்துள்ளதாகத்  கடந்த ஒரு வாரத்தில் சுமார் 723 பேர் சிகிச்சைக்கு சென்றுள்ளதாகவவும் தகவல் வெளியாகிறது.
 

இந்தக் கடும் குளிரில் இருந்து  நோயாளிகளைப் பாதுகாக்க வேண்டும் என்று இருதயவியல் துறை இயக்குனர் வினய் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த குளிர் காலத்தில் வயதானவர்களுக்கு மட்டுமின்றி பதின்ம வயதினருக்கும் மாரடைப்பு ஏற்படும் எனவும் இதனால் வெப்பம் ஏற்படுத்தித் தற்காத்துக் கொள்ளும்படி  அறிவுறுத்தி வருகின்றனர்.