திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 14 பிப்ரவரி 2023 (15:44 IST)

ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் வீடு தீப்பிடித்து எரிந்ததில் 2 பேர் பலி!

Fire
உத்தரபிரதேச மாநிலத்தில் ஆக்கிரமிப்பு அகற்ற்றும் பணியின்போது, வீடு தீப்பிடித்து எரிந்தது. இதில் 2 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள கான்பூர் பகுதியில் உள்ள மராவ்லி என்ற கிராமத்தில் சட்டவிரோத குடியிருப்புகள் அகற்ற உத்தரவிடப்பட்டதை அடுத்து, இப்பணியில் அதிகாரிகள் இன்று ஈடுபட்டனர்.

இந்த ஆக்கிரப்பு பகுதிகளில் இருந்த மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தீக் குளித்துவிடுவதாக  அதிகாரிகளை மிரட்டினர்.

இதில், ஒரு வீட்டில் இருந்த  தாய், மகன் ஆகியோர் இரண்டு பேர் இருந்த வீட்டில் எரிந்த தீயில் சிக்கி  உயிரிழந்தனர்.

2 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தீ விபத்தில் அதிகாரிகளுக்கும் தொடர்புள்ளதாக உள்ளூர் வாசி ஒருவர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள் நிலையில், 12 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.