செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 12 ஜனவரி 2019 (12:00 IST)

சபரிமலைக்குள் சென்றவர்களை ஐயப்பன் தண்டிப்பார்!! நடிகர் சர்ச்சைப் பேச்சு

சபரிமலைக்குள் சென்று அதன் புனிதத்தை கெடுத்தவர்கள் ஐயப்பனால் தண்டிக்கப்படுவார் என மலையாள நடிகர் சுரேஷ் கோபி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 
கடும் போராட்டங்களையும் எதிர்ப்பையும் மீறி  கடந்த 2ஆம் தேதி கனகதுர்கா, பிந்து ஆகிய இரண்டு பெண்கள் சபரிமலைக்குள் சென்று தரிசனம் செய்தனர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் உள்ளிட்ட பலர் கேரளாவில் போராட்டம் நடத்தி வருகின்றனர். 
 
இந்நிலையில் பிரபல மலையாள நடிகரும், பாஜக எம்.பியுமான சுரேஷ் கோபி சபரிமலைக்குள் மாறுவேடம் போட்டுக்கொண்டு உள்ளே சென்றது சரிதானா என மக்கள் முடிவு செய்யட்டும். கோவிலுக்குள் சென்று புனிதத்தை கெடுத்தவர்களை ஐயப்பன் தண்டிப்பான். இந்த அரசாங்கம் மாற்றம் என்ற பெயரில் மிகப்பெரிய தப்பை செய்துவிட்டது. விரைவில் அதற்கான பலன்களை அவர் அனுபவிப்பர் என கூறினார்.