கைது செய்யப்படுவாரா நடிகர் கொல்லம் துளசி !

VM| Last Updated: சனி, 12 ஜனவரி 2019 (14:58 IST)
சபரிமலை பெண்கள் வழிபாடு நடத்த சென்றால் அவர்களை இரண்டு துண்டாக வெட்டுவேன் என பேசிய விவாகாரத்தில் நடிகர் கொல்லம் துளசி எந்த நேரமும் கைதாகலாம் என பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


 
சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபாடு நடத்தலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 
இதனால் பல பெண்கள் இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்ல முயற்சி செய்து வருகிறார்கள் ஆனால் அவர்களை கோவிலுக்குள் செல்ல விடாமல் மறித்து போராட்டங்கள் நடக்கின்றன.  
 
இந்நிலையில் பிரபல மலையாள நடிகர் கொல்லம் துளசி  ஒரு கூட்டத்தில் பேசும்போது, சபரிமலையில் இளம்பெண்கள் தரிசனம் செய்தால் அவர்களை இரண்டு துண்டாக வெட்டுவேன். அதில் ஒரு பாதியை டெல்லிக்கும் ,இன்னொரு பாதியை கேரள முதல்வர் அலுவலகத்துக்கு அனுப்பி வைப்பேன் என்றார்.  
 
இது கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் கொல்லம் துளசி மீது ஜனநாயக வாலிபர் சங்கம் , காவல் நிலையத்தில் புகார் அளித்தது. இதைத்தொடர்ந்து கொல்லம் நீதிமன்றத்தில் கொல்லம் துளசி முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார்.  இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதன் பின்னர் கேரள உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுவையும் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி முன் ஆஜராக வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.  இதனால் கொல்லம் துளசி எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :