பிரபல நடிகர் மீது கடுப்பாகி வீட்டு வாசலில் பெட்ரோல் ஊற்றி கொளுத்திய ரசிகன்..! - காரணம் இது தான்

Last Updated: புதன், 9 ஜனவரி 2019 (12:01 IST)
நடிகர் யஷின் தீவிர ரசிகர் ஒருவர் அவரின் வீட்டின் முன்பு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.


 
பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த டிசம்பர் 21 ம் தேதி வெளியாகி கன்னட திரைவுலகத்திற்கு மாபெரும் பெருமை சேர்த்த படம் கே.ஜி.எஃப். இந்த படத்தில் கன்னட நடிகர் யஷ்  கதாநாயகனாக நடித்து அசத்தியிருந்தார்.
 
ஸ்ரீநிதி ரெட்டி கதாநாயகியாக நடித்திருந்த இப்படம் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் ரிலீஸாகி வசூல் வேட்டையை நடத்தியது. 


 
இதுவரை கன்னட திரைவுலகத்தில் முதன் முறையாக  ரூ. 200 கோடி வசூல் செய்த பெருமை இப்படத்திற்கே சேரும். 
 
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள அதிர்ச்சி தகவல் என்னவென்றால் ..!
 
கன்னட திரையுலகமே அண்ணாந்து பார்க்கும்  மாபெரும் வெற்றிப் படம் கொடுத்த மகா நடிகர் யஷ்ஷிற்கு  நேற்று தனது பிறந்தநாள். ஆனால் அவர் தனது பிறந்தநாளை கொண்டாடவில்லை. மேலும் யாரும் கொண்டாட வேண்டாம் என்றும்  தனது ரசிகர்களுக்கு அன்பு கட்டளை விடுத்தார். 
 
காரணம் என்னவென்றால்,  நடிகர் யஷ் தன் வீட்டின் மூத்த உறுப்பினராக நினைத்து வந்த நடிகர் அம்பரீஷ் அண்மையில் காலமானார். அவரை பிரிந்த சோகத்தில் உள்ள யஷ்  தனது பிறந்தநாளை கொண்டாட விரும்பவில்லை. இதை அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருந்தார். மேலும் தனது இந்த முடிவுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறும் தனது ரசிகர்களிடமும் வேண்டிக்கொண்டார்.

இந்நிலையில் நடிகர் யஷ் தனது பிறந்தாளை கொண்டாடவில்லை என்ற விரக்தியில் அவரின் தீவிர ரசிகர்  ரவி என்பவர் நடிகர் யஷ் வீட்டு வாசலில் தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடனே அங்கிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு அவரை காப்பாற்றி அருகில் உள்ள தனியார்  மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் தீக்காயங்களுடன் சற்று உடல்நிலை தேறி சிகிச்சை பெற்று வரும் ரவியை மருத்துவமனைக்கு சென்று பார்த்து நலம் விசாரித்தார் யஷ். 
 
மேலும் நடிகர் யஷ் பிறந்த நாள் என்பதனால் அவரின் ரசிகர்கள் ஏராளமானோர் கூடுவார்கள் என்று எண்ணி அவர் வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு ஹோட்டலில்  25 கிலோ பிரியாணி செய்து வைத்திருந்தனராம். 


இதில் மேலும் படிக்கவும் :