வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. வேட்பாளர்கள் பேட்டிகள்
Written By
Last Modified: வியாழன், 21 மார்ச் 2019 (14:01 IST)

நீரவ் மோடியை தப்பிக்க விட்டது யார் ? பிரியங்கா காந்தி கேள்வி

இந்தியாவில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13500 கோடி மோசடி செய்து லண்டனுக்குத் தப்பி ஓடினார் நீரவ் மோடி. இந்நிலையில் நேற்று லண்டனில் வெஸ்ட் மினிஸ்டரில் உள்ள கோர்ட் பிறப்பித்த வாரண்ட் உத்தரவை அடுத்து வைர வியாபாரி நீரவ் மோடியை கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் இதை பாஜவினர் பெருமையாக பேசிவந்தனர். நேற்று சமூக வலைதளங்களிலும் இதே பேச்சு தொடர்ந்தது. இதற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். 
 
இந்தியாவில் வைரவியாபாரம் செய்த நீரவ்மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரு. 13500 கோடி கடன் பெற்று அதை திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்குத் தப்பி ஓடினார். மதுபான ஆலை அதிபர் விஜய் மல்லையாவும் இதே போன்று ரூ. 14000 கோடி வங்கிகளில் கடன் பெற்று லண்டனில் தலைமறைவாக இருக்கிறார். 
 
இந்த இருபெரும் பண மோசடி மன்னன்களை கொண்டு வர அனைத்து தப்பினரும் போர்கொடி உய்ர்த்தி வருகின்றனர். 
 
இதுபற்றி பிரியங்கா காந்தி கூறியதாவது:
 
நீரவ் மோடி லண்டனில் கைது செய்தது பற்றி பாஜகவினர் புகழ்ந்து கொண்டாடி வருகின்றனர். ஆனால் இந்த பாஜக ஆட்சியில் தான் அவர் தப்பி ஓடினார். எனவே அவரை தப்பிக்க விட்டது யார் என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.