திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 25 அக்டோபர் 2023 (14:19 IST)

நடிகை கெளதமியை சந்தித்தேன், அவருக்கு உதவி செய்வேன்: அண்ணாமலை

நடிகை  கெளதமியை  சந்தித்தேன் என்றும்  அவருக்கு என்னால் உதவி செய்ய முடியும் என்றால் கண்டிப்பாக உதவி செய்வேன் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னாள் நடிகை கௌதமி பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். 25 ஆண்டுகளாக அவர் பாஜகவில் வந்த நிலையில் திடீரென அவர் விலகியது பரபரப்பை ஏற்படுத்தியது.

அவரிடம்  சொத்தை ஏமாற்றிய அழகப்பன் என்பவர் பாஜக பின்னணியில் பாதுகாக்கப்பட்டு வருவதாக கெளதமி குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில் இன்று பேட்டி அளித்த அண்ணாமலை ’நடிகை கௌதமியை நேற்று சந்தித்தேன், அவர் எனக்கு நண்பர், பிரச்சனை எதுவும் இல்லை என்று கூறினார்.

அவரது வழக்கை தமிழக அரசு கையில் எடுக்க வேண்டும். கட்சி சார்பில் அவரது மனக்குமுறலை கேட்டேன், அவருக்கு உதவி செய்ய முடியும் என்றால் நிச்சயம் செய்வேன்’ என்று தெரிவித்தார்.

Edited by Siva