1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 4 ஆகஸ்ட் 2020 (12:32 IST)

அயோத்தியில் மீச வச்ச ராமர் சிலை..?

அயோத்தியில் ராமர் கோவிலில் வைக்கப்படும் ராமர் சிலைக்கு மீசை இருக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 
 
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் துரிதமாக தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 5 ஆம் தேதி (நாளை) பிரதமர் நரேந்திர மோடி அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டவுள்ளார். 
 
முன்னதாக ராமர் கோவில் கருவறை பகுதியில் அமைப்பதற்கு வெள்ளி செங்கற்களை இந்திய தங்க சங்கம் நன்கொடையாக அளித்தது. அதை தொடர்ந்து ஜெயின் சமூக மக்கள் சார்பாக தற்போது மேலும் 24 கிலோ செங்கல் நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளது.
 
அடிக்கல் நாட்டு விழாக்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்துத்துவா தலைவரான சம்பாஜி பிதே, ராமர் மற்றும் லட்சுமணன் சிலைக்கு மீசை இருக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். 
 
இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, அயோத்தியில் நிறுவப் போகிற ராமர், லட்சுமணன் சிலைகளுக்கு மீசை இருக்க வேண்டும். ராமர், லட்சுமணன் சிலைகளுக்கு மீசை இல்லாமல் கோயில் கட்டப்பட்டாலும், என்னைப் போன்ற ராமர் பக்தருக்கு, அது பயனில்லை என்று தெரிவித்துள்ளார்.