லட்சத்தீவு விவகாரம்: முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார் நடிகை ஆயிஷா சுல்தானா

ayisha
லட்சத்தீவு விவகாரம்: முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார் நடிகை ஆயிஷா சுல்தானா
siva| Last Updated: செவ்வாய், 15 ஜூன் 2021 (08:17 IST)
லட்சத்தீவு விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நடிகையும் இயக்குனருமான ஆயிஷா சுல்தானாநீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

லட்சத்தீவில் புதிய நிர்வாக அதிகாரியான பிரபுல் படேல் என்பவர் குறித்து சமீபத்தில் சர்ச்சைக்குரிய கருத்தை நடிகையும் இயக்குனருமான ஆயிஷா சுல்தானா தெரிவித்தார். இதனையடுத்து அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அவர் கைது செய்யப்படும் வாய்ப்பு இருப்பதாக கருதப் பட்டதால் ஆயிஷா சுல்தானா முன்ஜாமீன் கோரி கேரள உயர் மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவில் தனக்கு ஒருபோதும் மத்திய அரசுக்கு எதிராக அதிருப்தியோ, வெறுப்பையோ தூண்டும் எண்ணம் இல்லை என்றும் தேசத்துரோக வழக்கு தவறானது மற்றும் நியாயமற்றது என்றும் இலட்சத் தீவில் உள்ள பாஜக தலைவர்கள் குறித்து தான் விமர்சனம் செய்ததாகவும் எனவே தன் மீது தேச துரோக வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது


இதில் மேலும் படிக்கவும் :