செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 11 ஜூன் 2021 (16:56 IST)

நடிகை ஆயிஷா சுல்தானா மீது போலீஸார் வழக்குப் பதிவு

நடிகையும் இயக்குநருமான ஆயிஷா சுல்தானா மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 குஜராத் அம்மாநில பிரபுல் கோடா படேல் லட்சத் தீவின் நிர்வாக அதிகாரியகா[ பொறுப்பேற்று 5 மாதங்கள் ஆகிறது.

இவர் பதவியேற்றது முதல் , அங்கு மது விற்பனை மற்றும் மாட்டிறைச்சிக்கு தடை போன்ற கடுமையான நடைமுறைகள் அமலில் உள்ளதாகத் தகவல் வெளியானது. இது அங்குள்ள மக்களின் கலாச்சாரத்திற்கும் மரபு வழிப் பழக்கத்திற்கும் எதிராக உள்ளதாகவும் இந்த உத்தரவுகளை விதித்துள்ள பிரபுல் கோடா படேலை மத்திய அரசு திரும்ப பெற வேண்டுமென முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற நடிகை ஆயிஷா சுல்தானா லட்சத் தீவுகளை அழிக்க மத்திய அரசால் அனுப்பி வைத்த உயிரி ஆயுதம்தான் பிரபுல் கோடா படேல் எனக் கூறினார்.

இவர் மீது நடிவடிக்கை எடுக்கவேண்டுமென்று கூறி லட்சத்தீவு பாஜக தலைவர் அப்துல்காதல் அங்குள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, நடிகை ஆயிஷா சுல்தானா மீது காவல்துறையினர் தேச துரோக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் திரைத்துறையினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.