செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 3 ஜூன் 2021 (17:37 IST)

முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்ய தடை… நீதிமன்றம் உத்தரவு!

நடிகை சாந்தினி பாலியல் தொல்லை குறித்த  வழக்கில் தலைமறைவாகியுள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பாலியல் வழக்கில் சிக்கி தலைமறைவாகி உள்ள நிலையில் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் மனு முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. நடிகை சாந்தினி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறியதை அடுத்து அவர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதனால் அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற நிலை இருந்தது.

இந்த நிலையில் நேற்று மணிகண்டன் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அவரின் மனுவை ஏற்று விசாரித்த நீதிமன்றம் வரும்  9 ஆம் தேதி வரை கைது செய்ய இடைக்கால தடை விதித்துள்ளது.