1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Manikandan bail plea at chennai highcourt

தலைமறைவிலும் ஜாமீன் மனு தாக்கல் செய்த மணிகண்டன்!

மணிகண்டன்
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பாலியல் வழக்கில் சிக்கி தலைமறைவாகி உள்ள நிலையில் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் மனு முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
நடிகை சாந்தினி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறியதை அடுத்து அவர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதனால் அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற நிலை இருந்தது 
 
இந்த நிலையில் சற்று முன் மணிகண்டன் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. பாலியல் வழக்கில் மணிகண்டன் தலைமறைவாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவரது சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது இந்த மனு விரைவில் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படும் என தெரிகிறது
அடுத்த கட்டுரையில்
புதுவை 3 நியமன உறுப்பினர்கள் வழக்கு: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு